அரசாங்கம் என்ன செய்கிறது? சென்னை வெள்ளம் குறித்து கேள்வி எழுப்பிய நடிகைகள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் பெய்த வரலாறு காணாத கனமழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக சென்னையின் முக்கிய பகுதிகள் உள்பட பல பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது.
வேளச்சேரி போன்ற பகுதிகளில் தரை தளம் முழுகி விட்டது என்றும் நகரின் முக்கிய பகுதிகளில் கூட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து விட்டது என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் நடிகை அதிதி பாலன் தனது சமூக வலைதளத்தில் ’நான் திருவான்மியூர் ராதாகிருஷ்ணன் நகர் என்ற பகுதிக்கு சென்றேன். அங்கு மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து இருந்தது. நீரை வெளியேற்றிய போது இரண்டு விலங்குகளின் உடல்கள் கிடைத்தது. அந்த தண்ணீரில் கால் வைத்து தான் நான் முதியவர்கள் மற்றும் குழந்தைகளை காப்பாற்ற சென்றேன். அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது? பொது மக்களை காப்பாற்ற முயற்சிக்காமல் பெரிய விஐபியை மட்டும் காப்பாற்றுவதற்கு ஒரு குழு செல்கிறது என்ற குற்றம் காட்டி இருந்தார்
அதேபோல் நடிகை கீர்த்தி பாண்டியன் தனது சமூக வலைத்தளத்தில் கூறிய போது ’எங்கள் பகுதியில் எப்போதும் நீர் தேங்காது, 2015 ஆம் ஆண்டு பெய்த மழையில் கூட நீர் இல்லை. ஆனால் ஏதோ காரணங்களுக்காக அவ்வப்போது குழிகள் தோண்டியதால் தான் தற்போது மழை நீரும் சாக்கடை நீரும் கலந்து எங்கள் வீட்டுக்குள் புகுந்துள்ளது. எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments