போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கிய பிரபல தமிழ் நடிகைகள்?

  • IndiaGlitz, [Friday,September 03 2021]

கடந்த சில ஆண்டுகளாக போதைப்பொருள் விவகாரத்தில் திரையுலக பிரபலங்கள் சிக்கி வருவது தொடர்கதையாகி வருவது தெரிந்ததே. பிரபல கன்னட நடிகை சஞ்சனா கல்ராணி, ராகினி திவேதி ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கன்னட நடிகை சோனியா அகர்வாலும் இதே காரணத்திற்காக கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது போதைப்பொருள் விவகாரத்தில் பிரபல தெலுங்கு நடிகைகள் சார்மி கவுர், ரகுல் பிரீத் சிங் மற்றும் தெலுங்கு நடிகர்கள் ராணா, நவ்தீப் ரவி தேஜா மற்றும் தெலுங்கு திரைப்பட இயக்குநர் பூரி ஜெகன்நாத் ஆகியோர்களும் சம்பந்தப்பட்ட இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று தமிழ் மற்றும் தெலுங்கு நடிகை ரகுல் பிரித் சிங் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை அடுத்து ரகுல் ப்ரித்திசிங் ஆஜரானார் என்பதும் இதுகுறித்த வீடியோ வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது. போதை பொருள் விவகாரத்தில் தெலுங்கு பிரபல நடிகர், நடிகைகள் சம்பந்தப்பட்ட இருப்பதாக வெளிவந்த தகவல் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

82 வயதில் விஷால் தந்தைக்குக் கிடைத்த பெருமைக்குரிய பதவி!

பிரபல நடிகர் விஷாலின் தந்தை ஜிகே ரெட்டி அவர்களுக்கு 82 வயதில் பெருமைக்குரிய பதவி கிடைத்தது குறித்து விஷால் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜிபி முத்து பிக்பாஸ் போட்டியாளரா? வைரல் புகைப்படம்!

டிக் டாக் மூலம் நகைச்சுவையான மற்றும் சர்ச்சைக்குரிய பேச்சின் மூலம் பிரபலமடைந்த ஜிபி முத்து, அதன்பின் டிக் டாக் தடை செய்யப்பட்டவுடன் யூடியூபில் பிரபலமடைந்தார்.

ஒரே ஆட்டத்தில் ரசிகர்களை மிரட்டிவிட்ட இந்திய வீரர்… கொண்டாடும் ரசிகர்கள்!

இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையிலான 4 ஆவது டெஸ்ட் மேட்சில் இந்திய இளம் வீரர் ஷர்துல் தாகூர் வெறும் 31 பந்துகளில் அரைச்சதத்தை அடித்து புதிய சாதனைப் படைத்துள்ளார்

ரத்தம் சொட்ட சொட்ட பந்துவீசும் இங்கிலாந்து வீரர்… மிரண்டுபோன ரசிகர்கள்!

இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையிலான 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது.

தங்கம் வென்ற இந்திய வீராங்கனைக்கு மீண்டும் வெண்கலம்! குவியும் வாழ்த்துக்கள்

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் ஏற்கனவே தங்கம் வென்ற இந்திய வீராங்கனைக்கு இன்று வெண்கல பதக்கம் கிடைத்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது