என்ன ஒரு தைரியம்?  குளத்தில் இறங்கி யானையை குளிப்பாட்டும் நடிகை: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Friday,January 20 2023]

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல மொழிகளில் நடித்த நடிகை ஒருவர் குளத்தில் இறங்கி இரண்டு யானைகளை குளிப்பாட்டும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாய் வருகிறது.

பிரபுதேவா நடித்த ’சார்லி சாப்ளின்’ என்ற திரைப்படத்தில் நாயகியாகவும், சிம்பு நயன்தாரா நடித்த ’இது நம்ம ஆளு’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியவருமான நடிகை அடா சர்மா சமூக வலைதளங்களில் பிரபலம் என்பதும் குறிப்பாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சுமார் 7 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வனவிலங்கு ஆர்வலரான அடா சர்மா அவ்வப்போது நாய், குரங்கு, பூனை உள்ளிட்ட விலங்குகளுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது நடுக்காட்டில் உள்ள ஒரு குளத்தில் இரண்டு யானைகள் குளித்து கொண்டிருக்கும் போது அந்த யானைகளுடன் குளத்தில் இறங்கி குளிப்பாட்டும் வீடியோவை பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இரண்டு யானைகளுடன் குளத்தில் இறங்கிய நடிகைக்கு என்ன ஒரு தைரியம் என பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவரா?

கடந்த நூறு நாட்களுக்கு மேல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நாளை மறுநாள் முடிவடைய போகிறது என்பதும் உலக நாயகன் கமலஹாசன் நாளை மறுநாள் டைட்டில் வின்னர் யார் எ

மிட்வீக் எவிக்சனில் வெளியேறிய போட்டியாளர் இவரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் முடிவடையும் நிலையில் இந்த சீசனில் சில புதுமையான அம்சங்களை பார்த்து வருகிறோம். 

கதறி அழும் விக்ரமன்... என்ன காரணம்?

பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு நாட்களில் நிறைவடை இருக்கும் நிலையில் இந்த சீசனின் டைட்டிலை வெல்வார் என்று எதிர்பார்க்கப்படும் விக்ரமன் கதறி அழும் வீடியோ

முகேஷ் அம்பானியின் மகன் திருமணம்.. குவிந்த பாலிவுட் பிரபலங்கள்!

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பாலிவுட் திரை உலகின் பிரபலங்கள் குவிந்தனர். 

யாரும் பயப்பட வேண்டாம், வதந்திகளை நம்பாதீர்கள்: இயக்குனர் சுசீந்திரன்

 நடிகர் விஜய் ஆண்டனி குறித்து யாரும் பயப்பட வேண்டாம் என்றும் அவர் நலமாக இருக்கிறார் என்றும் அவரது உடல் நலம் குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் இயக்குனர் சுசீந்திரன்தெரிவித்துள்ளார்.