இதுதான் என்னுடைய கடைசி வீடியோ: தற்கொலைக்கு முயன்ற தமிழ் நடிகையால் பரபரப்பு?

  • IndiaGlitz, [Sunday,July 26 2020]

விஜய், சூர்யா நடித்த ‘பிரெண்ட்ஸ்’ உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்த நடிகை விஜயலட்சுமி தற்கொலை செய்யப்போவதாக பதிவு செய்து செய்துள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்த வீடியோவில் அவர் கூறியபோது, ‘என்னை இரண்டு நபர்கள் அவமானப்படுத்தியதாகவும் அதனால் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் முன் ஜாமீன் எடுக்க யாரும் அனுமதிக்ககூடாது என்றும், எனது மரணத்திற்கு அந்த இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் இருவர் பெயரையும் அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நான் இன்னும் ரொம்ப நாள் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டேன், ஆனால் என்னை வாழ விடாமல் செய்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்று தற்போது அடையார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது