பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்ட கமல், ரஜினி பட நடிகை!

  • IndiaGlitz, [Monday,January 10 2022]

கமல், ரஜினி உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்த நடிகை ஒருவர் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதாக அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் ஜனவரி 10ஆம் தேதி அதாவது இன்று முதல் இந்தியா முழுவதும் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அந்த வகையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகை ஸ்ரீபிரியா தான் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கமல் ரஜினி உள்பட பல பிரபலங்களுடன் நடித்தவர் நடிகை ஸ்ரீப்ரியா என்பதும் இவர் ஒரு சில படங்களை தயாரித்து, இயக்கி உள்ளார் என்பதும் தற்போது அவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.