உக்ரைன் குழந்தைகளை மீட்க நிதி திரட்டும் தமிழ் திரைப்பட நடிகை: குவியும் பாராட்டுக்கள்
- IndiaGlitz, [Tuesday,March 01 2022]
கடந்த 6 நாட்களாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடும் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் உக்ரைன் நாட்டில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்களை குறிப்பாக மாணவர்களை மீட்க இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் உக்ரைன் நாட்டில் உள்ள குழந்தைகளுக்கு எந்த வித ஆபத்தும் நேராமல் இருக்க தமிழ் திரைப்பட நடிகை ஒருவர் முயற்சி எடுத்திருப்பது எடுத்திருப்பதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
விஜய் இயக்கிய ‘மதராச பட்டணம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை எமி ஜாக்சன், அதன் பின் ரஜினி ,விஜய், தனுஷ், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள நடிகை எமிஜாக்சன், அங்கு சிக்கித்தவிக்கும் குழந்தைகளை மீட்க நிதி திரட்டி வருகிறார். உக்ரைனில் உள்ள குழந்தைகளின் நிலையை தன்னால் கனவில் கூட நினைத்து பார்க்க முடியவில்லை என்றும், அந்த குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளேன் என்றும் அதற்கான நிதியை திரட்டி வருகிறேன் என்றும் உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமிஜாக்சன் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து உக்ரைன் குழந்தைகளை காப்பாற்ற எமிஜாக்சன் எடுத்துள்ள முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.