close
Choose your channels

இது என்ன சம்மரா? திருமணமாகி குழந்தை பிறந்த பின்னரும் பிகினியில் பிரபல நடிகை..!

Sunday, January 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா கார்த்தி உள்பட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நடிகை துபாயில் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூர்யா நடித்த ’மாஸ் என்ற மாசு மாசிலாமணி’ கார்த்தி நடித்த ’சகுனி’ உள்பட ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் ப்ரணிதா. இவர் தொழில் அதிபர் பிரஜித் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ப்ரணிதாவுக்கு 6 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ப்ரணிதா துபாயில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக துபாய் சுற்றுப்பயணம் குறித்த சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் சிங்கிள் பீஸ் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து ’இது என்ன சம்மரா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லட்சக்கணக்கான லைல்ஸ் மற்றும் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

நடிகை ப்ரணிதா திருமணத்திற்கு தற்போது தமிழ் படங்களில் தான் நடிக்கவில்லை என்றாலும் அவர் தொடர்ச்சியாக தெலுங்கு கன்னடம் இந்தி படங்களில் நடித்து வருகிறார். தற்போது கூட அவர் ஒரு கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment