ஸ்கூல் காலத்தில் இருந்தே சூர்யா மீது க்ரஷ்: விவாகரத்து பெற்ற தமிழ் நடிகை
- IndiaGlitz, [Sunday,July 31 2022]
பள்ளி காலத்தில் இருந்தே தனக்கு சூர்யா மீது க்ரஷ் என விவாகரத்து பெற்ற நடிகை ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும், இந்த நிகழ்ச்சிகள் பெரும்பாலும் பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் சமீபத்தில் தொடங்கிய நிகழ்ச்சி ’ராஜு வூட்ல பார்ட்டி’ இந்த நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் புரோமோ விடியோ சற்று முன் வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் நடிகை அமலாபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளினி பிரியங்கா அவரிடம், ‘உங்களுக்கு எந்த ஆக்டர் மீது க்ரஷ் என்று கேட்டபோது, ‘பள்ளி காலத்தில் இருந்தே நான் சூர்யாவின் மிகப்பெரிய ரசிகை’ என்று கூறினார்.
இதனை அடுத்து ராஜூ, ‘திருமணமாகாத சிங்கிளாக இருக்கும் நடிகர் ஒருவரை கூறுங்கள் என்று கூறியபோது எஸ்டிஆர் என பதில் கூறினார். அமலாபாலின் இந்த பதிலை அடுத்து பார்வையாளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
இந்த actor மேல யாருக்குதான் crush இருக்காது.. ????
— Vijay Television (@vijaytelevision) July 31, 2022
ராஜு வூட்ல பார்ட்டி - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #RajuVootlaParty #VIjayTelevision pic.twitter.com/hVys9Etvac