காட்டுக்குள் போனாலும் போவேன், பிக்பாஸ் வீட்டுக்குள் போக மாட்டேன்: தமிழ் நடிகை..!

  • IndiaGlitz, [Thursday,September 14 2023]

விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் போட்டியாளராக கலந்து கொள்வார் என்று கூறப்பட்ட நடிகை ஒருவர் ’காட்டுக்குள் சென்றாலும் செல்வேனே தவிர, பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல மாட்டேன் என பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவியில் அக்டோபர் முதல் வாரம் பிக்பாஸ் 7வது சீசன் தொடங்கலாம் என்று கூறப்படும் நிலையில் இந்த சீசனில் மாகாபா ஆனந்த், ரோஷினி, ஊடகவியலாளர் ரஞ்சித், ஷகிலா மகள் மிலா, நடிகர் பிருத்விராஜ், நடிகை தர்ஷா குப்தா, குக் வித் கோமாளி பிரபலம் ரவீனா மற்றும் ரேகா நாயர் ஆகியோர் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வது குறித்து கேள்வி ஒன்றை பதிலளித்த நடிகை ரேகா நாயர் ’என்னை ஒரு காட்டுக்குள் போய் இருக்க சொன்னால் கூட அங்கு எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் இருப்பேன். ஆனால் பிக் பாஸ் வீட்டுக்குள் கண்டிப்பாக போக மாட்டேன்.

நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கடந்த மூன்று சீசன்களாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அங்கு போக எனக்கு சுத்தமாக விருப்பமில்லை. 100 நாட்கள் அந்த வீட்டுக்குள் போய் இருப்பதற்கு பதிலாக தினமும் ஒரு மரம் என 100 மரங்கள் வைக்கலாம்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

More News

ஒரே படத்தில் 4 பிக்பாஸ் தமிழ் பிரபலங்கள்.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு..!

ஒரே படத்தில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நான்கு போட்டியாளர்கள் நடித்துள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து பட குழுவினர் கேக் வைத்து கொண்டாடியுள்ளனர்

இசையமைப்பாளருக்கு ஐபோன் வாங்கி பரிசளித்த சுந்தர் சி பட இயக்குனர்..

இசையில் மிரட்டிய இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு ஐபோன் வழங்கி "ஒன் 2 ஒன்" பட இயக்குநர் கே திருஞானம் அசத்தியுள்ளார். இந்த படத்தில் சுந்தர் சி மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து நடித்துள்ளனர்.

'ஜவான்' பாடலுக்கு செம்ம ஆட்டம் போடும் ப்ரியா அட்லி, கீர்த்தி சுரேஷ்.. அட்லி என்ன செய்கிறார் பாருங்க..!

சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'ஜவான்' திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு அட்லியின் மனைவி பிரியா அட்லி மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் செம ஆட்டம் ஆடும் வீடியோ

பிரபாஸ் அடுத்த படத்தில் நயன்தாரா உள்பட 3 பிரபலங்கள்.. ஆச்சரியத்தில் திரையுலகம்..!

ஷாருக்கான் உடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'ஜவான்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று இருக்கும் நிலையில் தற்போது அவர் ஒரு பான் இந்தியா திரைப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை

காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் இன்னொரு படம்.. டைட்டில் வீடியோ ரிலீஸ்..!

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான சதீஷ் கதாநாயகனாக நடித்த 'நாய்சேகர்' மற்றும் 'ஓ மை கோஸ்ட்' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பு பெற்றது. இதனை அடுத்து அவர் கதாநாயகனாக