பிரபாஸ் ராமர் மாதிரியே இல்லை.. தமிழ் நடிகையின் பதிவால் பரபரப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபாஸ் நடித்த ’ஆதிபுருஷ்’ என்ற திரைப்படம் வரும் 16ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை நாடு முழுவதும் படக்குழுவினர் புரமோஷன் செய்து வருகின்றனர். சமீபத்தில் திருப்பதியில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது என்பது இந்த படத்தின் டிரைலர் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகிய இந்த படம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது என்பதும் ராமர் கேரக்டரில் பிரபாஸ், சீதை கேரக்டரில் கீர்த்தி சனான், ராவணன் கேரக்டரில் சையது அலிகான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமிதாப்பச்சன் உட்பட பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ் நடிகை கஸ்தூரி இந்த படம் குறித்து தனது ட்விட்டரில் விமர்சனம் செய்துள்ளார். அதில் ’ராமர் மற்றும் லட்சுமணன் மீசை தாடியுடன் இருப்பதை யாராவது பார்த்திருக்கிறோமா? ஏன் இந்த குழப்பமான நிலை? தெலுங்கு திரையுலகில் ஸ்ரீராமன் கேரக்டரில் பல திறமையான நடிகர்கள் நடித்துள்ளனர், ஆனால் இந்த படத்தில் பிரபாஸை பார்க்கும்போது ராமர் போல் தெரியவில்லை, கர்ணன் போல் இருக்கிறார் என்று பதிவு செய்துள்ளார்.
கஸ்தூரியின் இந்த ட்வீட்டுக்கு வழக்கம்போல் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.
Is there ANY tradition where Lord Ramji and Laxman are portrayed with moustache and facial hair? Why this disturbing departure ? Especially in prabhas's telugu home, Sri Rama has been played to perfection by legends.
— Kasturi (@KasthuriShankar) June 7, 2023
I feel Prabhas looks like Karna not Rama. #Adipurush pic.twitter.com/glkQZ7nHj9
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com