உக்ரைனில் சிக்கி கொண்டாரா தமிழ் நடிகை? அவரே அளித்த விளக்கம்!

  • IndiaGlitz, [Monday,February 28 2022]

உக்ரைன் நாட்டில் தமிழ் நடிகை ஒருவர் சிக்கிக் கொண்டதாக ஊடகங்களில், சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானதை அடுத்து அந்த நடிகை இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

தமிழில் 'பிறப்பு’ என்ற திரைப்படத்திலும் ஒருசில மலையாள திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பிரியா மோகன். இவர் நடிகை பூர்ணிமா இந்திரஜித்தின் சகோதரி என்பதும் தற்போது இவர் யூடியுப் மூலம் பிரபலமாகி வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகை பிரியா மோகன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உக்ரைன் சென்றதாகவும் அங்கிருந்து அவர் போர் காரணமாக திரும்ப முடியாமல் தவித்து வருவதாகவும் அவரது குடும்பத்தினர் அவரை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பிரியா மோகன், ‘கடந்த ஆகஸ்ட் மாதம் நானும் எனது குடும்பத்தினரும் உக்ரைன் நாட்டிற்கு சுற்றுலா சென்றது உண்மைதான் என்றும் ஆனால் நாங்கள் உக்ரைனில் இருந்து திரும்பி விட்டோம் என்றும் தற்போது கொச்சியில் வசித்து வருகிறோம் என்றும் கூறினார்.

நானும் எனது குடும்பத்தாரும் உக்ரைனில் சிக்கிக் கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் முற்றிலும் தவறு என்றும் போர்பதட்டம் உள்ள இந்த நேரத்தில் இதுபோன்ற தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
 

More News

நடிகையின் பாவாடையை கடிக்க முயன்று, முடியாமல் தோற்று போன சல்மான்!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சல்மான் கான் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ’பீஸ்ட்’ நாயகி நடனத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறிய வீடியோ வைரலாகி வருகிறது.

ரஜினி, விஜய் படங்களை அடுத்து தனுஷ் படத்திற்கு கிடைத்த பெருமை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தளபதி விஜய்யை அடுத்து தனுஷ் திரைப்படத்திற்கு கிடைத்த பெருமை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

விஜயகாந்தா இவர்? லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஆள் அடையாளமே தெரியவில்லை என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல்: வெற்றி பெற்றது யார்?

தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் நேற்று இரவு வெற்றி பெற்றது யார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அருண் விஜய்யின் 'யானை' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் உருவாகி வரும் 'யானை' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட்