என் கணவர் வேறு யாருக்காவது புரபோஸ் செய்தால் எனக்கு ரொம்ப பிடிக்கும்: தமிழ் நடிகை..!

  • IndiaGlitz, [Saturday,February 11 2023]

எனது கணவர் வேறு எந்த பெண்ணுக்காவது புரபோஸ் செய்தால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் என தமிழ் நடிகை ஒருவர் விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை. இதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமார் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரும் தமிழ் நடிகையுமான சுஜா வருணி தம்பதிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் லாஸ்லியா கலந்து கொண்ட நிலையில் அவரிடம் புரபோஸ் செய்ய வேண்டும் என்ற டாஸ்க் சிவாவுக்கு கொடுக்கப்படுகிறது. அதில் சிவா, லாஸ்லியாவை பார்த்து கூறியபோது, ‘நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள், நீங்கள் சிரித்தால் சின்ன சின்ன பற்கள் மிகவும் அழகாக இருக்கும், இரவு என்னால் தூங்க முடியாது, உங்களுடைய பற்கள் நட்சத்திரங்கள் போல் கனவில் வந்த போகும்.

வாழ்க்கையில் எனக்கு ஒரே ஒரு ஆசைதான், உங்கள் கையை கோர்த்துக்கொண்டு வாழ்க்கை முழுவதும் எவ்வளவு தூரம் நடந்து கொள்ள முடியுமோ, அவ்வளவு தூரம் நடந்து செல்ல வேண்டும். நிறைய குழந்தைகளை பெற்றுக்கொண்டு சந்தோசமாக இருக்க வேண்டும். நீங்கள் என்னுடைய வாழ்க்கையில் இல்லை என்றால் என்னுடைய வாழ்க்கையே லாஸ் ஆகிவிடும் என்று கூறி ஐ லவ் யூ என்று கூறுகிறார். இதனை அடுத்து லாஸ்லியா அவருக்கு ரோஸ் கொடுக்கும் காட்சி உள்ளது.

தனது கணவர் சிவா, லாஸ்லியாவுக்கு காதலை புரொபோஸ் செய்ததை ஜாலியான கொண்டாட்டத்துடன் பார்த்து வந்த சுஜா வருணி கூறிய போது, ‘சீரியஸாகவே இது எனக்கு ஜாலியாக இருக்கிறது. இந்த மாதிரி சிவா யார்கிட்டயாவது புரொபோஸ் செய்தால் எனக்கு ரொம்ப பிடிக்கும்’ என்று கூறினார். அப்போது டிஜே பிளாக், ‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்ற பாடலை ஒலிக்க அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் சிரித்தன. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

'துணிவு' படத்தை அடுத்து ஷாலினி அஜித் மகளுடன் பார்த்த படம்.. வைரல் வீடியோ

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக வெளியான நிலையில் அந்த படத்தை தனது மகள் அனோஷ்கா மற்றும் தங்கை ஷாமிலியுடன் ஷாலினி அஜித் பார்த்தார் என்பதும்

விஜய்யின் 'லியோ': லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட மாஸ் புகைப்படம்..!

தளபதி விஜய் நடித்துவரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கொடைக்கானலில் நடந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. 

'லியோ' பாணியில் 'ஏகே62': சுபாஷ்கரனிடம் ஒப்புதல் வாங்கிவிட்டாரா மகிழ்திருமேனி?

விஜய் நடித்து வரும் 'லியோ' திரைப்படத்தின் டைட்டிலை அறிவிக்கும் போது அட்டகாசமான புரோமோ வீடியோவுடன் அறிவிக்கப்பட்ட நிலையில் அதேபோல் 'ஏகே 62' படத்தின் டைட்டிலையும் புரோமோ வீடியோ உடன்

மூளைமாற்று அறுவை சிகிச்சை கதையா? 'பிச்சைக்காரன் 2' படத்தின் டிரைலர்..!

 விஜய் ஆண்டனி நடித்த இயக்கியுள்ள 'பிச்சைக்காரன் 2' படத்தின் முதல் நான்கு நிமிட காட்சிகள் இன்று ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் இந்த வீடியோ ரிலீஸ் ஆகியுள்ளது. 

நீண்ட இடைவெளிக்கு பின் ஆக்ரோஷமான ஒரு அம்மன் பாட்டு: பிருந்தாவின் 'தக்ஸ்' பாடல் ரிலீஸ்..!

நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் உருவான 'ஹேய் சினாமிகா' என்ற திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது அவர் இயக்கி முடித்து உள்ள இரண்டாவது திரைப்படம் 'தக்ஸ்'.