அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டால் முத்தம் மட்டும் தருவேன்: தமிழ் நடிகையின் அதிர்ச்சி பேட்டி..!
- IndiaGlitz, [Sunday,January 21 2024]
அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று யாராவது கேட்டால் முத்தம் மட்டுமே கொடுப்பேன் என தமிழ் நடிகை ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரை உலகம் முதல் ஹாலிவுட் திரை உலகம் வரை நடிகைகள் பெரும்பாலான குற்றச்சாட்டு வைப்பது அட்ஜெஸ்ட்மெண்ட். வாய்ப்புகள் கேட்டு வரும்போது அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் வலியுறுத்துவார்கள் என்று குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் சில தமிழ் படங்களில் நடித்த நடிகை பாப்ரி கோஷ் என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் 'அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தால் மட்டுமே பட வாய்ப்பு என்று என்னிடம் யாராவது கேட்டால், உடனே நான் முடியாது என்று சொல்ல மாட்டேன், நேராக அந்த நபரின் வீட்டிற்கு சென்று அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் மட்டும் ஒரே ஒரு முத்தம் கொடுப்பேன். அதன் பிறகு அந்த நபரின் வீட்டில் உள்ளவர்கள் அவரை கவனித்துக் கொள்வார்கள்’ என்று கூறினார்.
பொதுவாக இது போன்ற பிரச்சனையை சந்திப்பவர்கள் வெளியே சொல்ல பயந்து கொண்டு இருப்பதால்தான் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது போன்ற பிரச்சனைகளில் துணிச்சலான முடிவு எடுக்க வேண்டும்’ என்று நடிகை பாப்ரி கோஷ் தெரிவித்துள்ளார்.
நடிகை பாப்ரி கோஷ் ’டூரிங் டாக்கீஸ்', 'ஓய்', 'சக்க போடு போடு ராஜா', 'பைரவா', 'விஸ்வாசம்' போன்ற தமிழ் படங்களிலும் சில தெலுங்கு, பெங்காலி மொழி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.