தயவுசெய்து உதவி செய்யுங்கள்: விஜய் பட நடிகையின் வேண்டுகோள் வீடியோ வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்த ’தெறி’ உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை சுனைனா சற்று முன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வேண்டுகோள் ஒன்றை விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் சுனைனா கூறியிருப்பதாவது:
பொதுவாக நான் யாருக்கும் உதவி கேட்டு வீடியோ வெளியிடுவதில்லை. ஆனால் இது ஒரு எமர்ஜென்சி. எனக்கு தெரிந்த அபினேஷ் என்பவர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு தற்போது நிதி உதவி தேவைப்படுகிறது. மேல்சிகிச்சைக்காக அவருக்கு தேவைப்படும் நிதியை தயவு செய்து அனைவரும் கொடுத்து உதவுங்கள். நானே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளதால் அதன் வலி எனக்கு தெரியும்.
சிறிய தொகையாக இருந்தாலும் பெரிய தொகையாக இருந்தாலும் உதவி செய்து அவருக்கு தேவையான நிதியை கொடுத்து அவரை காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் இந்த வீடியோவை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பகிர்ந்து அவினாஷ்க்கு உதவி கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று சுனைனா தெரிவித்துள்ளார். சுனைனாவின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
#Emergency .. pls help @TheSunainaa #CoronavirusIndia pic.twitter.com/EbtAHKmqlv
— Johnson PRO (@johnsoncinepro) May 31, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com