'என்னை விஷ ஊசி போட்டு கொன்று விடுங்கள்: முதல்வருக்கு தமிழ் நடிகை வைத்த கோரிக்கை.,.!
Send us your feedback to audioarticles@vaarta.com
நான் உடல்நல குறைவால் சித்திரவதையை அனுபவித்து வருகிறேன் என்றும் என்னை விஷ ஊசி போட்டு கொன்றுவிடுங்கள் என்றும் கூறிய தமிழ் நடிகை ஒருவர் தனக்கு உதவி செய்ய வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வசந்த பாலன் இயக்கிய ’அங்காடி தெரு’ உட்பட ஒரு சில படங்களில் நடித்தவர் நடிகை சிந்து. ’நாடோடிகள்’ ’நான் மகான் அல்ல’ ’தெனாவெட்டு’ ’கருப்பசாமி குத்தகைதாரர்’ உள்பட பல படங்களில் நடித்த இவர் ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பல்வேறு சிகிச்சைகள் எடுத்தும் குணமாகாமல் உள்ளார். 2020 ஆம் ஆண்டுதான் எனக்கு புற்றுநோய் இருப்பதை தெரிந்து கொண்டேன், அதன்பிறகு எனது மார்பகங்கள் அகற்றப்பட்டது, இப்போது மார்பக புண்கள் ஆறிவிட்டாலும் எனது நோய்க்கு தீர்வு கிடைக்கவில்லை. ஆங்கில மருத்துவம் ,சித்த மருத்துவம் என அனைத்தையும் நான் முயற்சி செய்து பார்த்து விட்டேன். ஆனால் வறுமை காரணமாக என்னால் சிகிச்சையை தொடர முடியவில்லை.
நான் மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள், ஆனால் நான் வேலைக்கு சென்றால் தான் சாப்பாடு என்ற நிலைமை காரணமாக வேலை செய்து கொண்டே சிகிச்சை எடுத்து வருகிறேன். இந்த நிலையில் என்னால் இந்த சித்திரவதையை தாங்க முடியவில்லை, நான் தூங்கும்போது என்னை விஷ ஊசி போட்டு கொன்றுவிடு என்று தம்பியிடம் கூறினேன் என்றும் நடிகை சிந்து தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் புற்றுநோய் கண்டறியும் மிஷின் ஒன்று உலகத்திலேயே நான்கு இடங்களில் தான் இருக்கிறது என்றும் இந்தியாவில் பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் இருக்கிறது என்றும் ஆனால் அங்கு சென்று சிகிச்சை செய்வதற்கு அதிக பணம் செலவாகும் என்றும் கூறியுள்ளனர். அந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள எனக்கு உதவி செய்யுமாறு தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுக்க முயற்சி செய்து வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் எனது மகள் 27 வயதில் கணவரை இழந்து குழந்தையுடன் தவித்துக் கொண்டிருக்கிறார், அவருக்கு அரசு வேலை அளிக்கவும் முதல்வர் உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments