நடிகைகளை புகைப்படம் எடுக்கக்கூடாது என சட்டம் கொண்டு வரவேண்டும்: தமிழ் நடிகை கோரிக்கை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகைகளை பொது இடத்தில் புகைப்படம் எடுக்கக் கூடாது என சட்டம் கொண்டு வர வேண்டும் என தமிழ் நடிகை ஒருவர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகைகள் வீட்டை விட்டு வெளியே வந்தாலே போதும், உடனே அவர்களுடன் புகைப்படம் எடுப்பதும் செல்பி எடுப்பதுமான கலாச்சாரம் தற்போது அதிகரித்து வருகிறது. இன்னும் ஒரு படி மேலே போய் நடிகைகள் வீட்டுக்குள் இருக்கும்போதே எதிர் வீட்டில் இருந்தும் பக்கத்து வீட்டில் இருந்தும் ஜூம் செய்து புகைப்படம் எடுக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட் வீட்டுக்குள் இருக்கும்போது எதிர் வீட்டில் இருந்து எடுத்த புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பதும் எல்லை மீறி ரசிகர்கள் செயல்படுகிறார்கள் என்று ஆலியா பட் காட்டமாக விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தமிழ் திரைப்பட நடிகைகளில் ஒருவரான ராஷி கண்ணா கூறும்போது நடிகைகளுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று எல்லோருக்கும் விருப்பம் இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் நடிகைகளுக்கும் தனி உரிமை இருக்கிறது, அதனால் எல்லை மீறக் கூடாது. மக்கள் நடிகைகளின் தனி உரிமையை மதிக்க வேண்டும், நடிகைகள் எங்கு சென்றாலும் போட்டோ கிளிக் செய்வது என்பது நாகரீகம் அல்ல, அவர்களாகவே விரும்பி உங்களுக்கு புகைப்படம் எடுக்க அனுமதி கொடுத்தால் தாராளமாக எடுக்கலாம், ஆனால் அதே நேரத்தில் ஒரு எல்லையை கடந்து உங்களால் நடிகைகளை புகைப்படம் எடுப்பது தவறு. இதற்கு தகுந்த சட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
நடிகை ராஷி கண்ணாவின் கோரிக்கையை அரசு பரிசீலிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments