பெயரை மாற்றியதால் நெட்டிசன்கள் கலாய்ப்பு: டுவிட்டரை விட்டே விலகிய நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனது பெயரை மாற்றியதாக டுவிட்டரில் நடிகை ஒருவர் பதிவு செய்ததை அடுத்து அவரை நெட்டிசன்கள் கலாய்த்து வந்ததால் அவர் நான்கு மாதங்களுக்கு ட்விட்டர் பக்கமே வர மாட்டேன் என்று விலகிச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிரத்னம் இயக்கிய ’காற்று வெளியிடை’ மாதவன், விஜய்சேடுபதி நடித்த ’விக்ரம்வேதா’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்தவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். அஜித் நடிப்பில் உருவான ’நேர்கொண்டபார்வை’ படத்திலும் இவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது பெயரை மாற்றுவதாக அறிவித்தார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் என்ற பெயரை ஷ்ரத்தா ரமா ஸ்ரீநாத் என மாற்றிக் கொள்வதாகவும், ரமா என்பது தனது அம்மாவின் பெயர் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
ஷ்ரத்தா என்ற பெயரில் ஆரம்பிக்கும் நடிகைகள் பலர் இருப்பதால் தான் அவர் பெயரை மாற்றியுள்ளதாக நெட்டிசன்கள் கலாயத்ததால் அதிருப்தி அடைந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், உங்களுக்கு கமெண்ட்ஸ்களுக்கு நன்றி என்றும், இன்னும் 4 மாதத்திற்கு ட்விட்டர் பக்கமே வர மாட்டேன் என்று ஆவேசமாக பதிவு செய்துள்ளார். அவர் டுவிட்டரை விட்டு விலகிய பின்னரும் நீங்கள் டுவிட்டரில் இருந்து விலகுவதால் டுவிட்டர் நிறுவனத்திற்கு நஷ்டம் ஆகிவிடும் என்றும் தொடர்ந்து நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.
Which intern is handling this account ra babu. 861k followers ?? https://t.co/EGGwFDUqFU
— Shraddha Srinath (@ShraddhaSrinath) August 3, 2022
On Instagram though i changed my name to Shraddha Rama Srinath. Maybe i should change it here too. Rama is my mom's name. Henceforth will consciously introduce myself as Shraddha Rama Srinath everywhere. Watch me.
— Shraddha Srinath (@ShraddhaSrinath) August 3, 2022
Okay enough Twitter for the next 4 months thank you for your sassy replies byeeee
— Shraddha Srinath (@ShraddhaSrinath) August 3, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com