சுபயோக சுபதினத்தில் பதவியேற்பு விழா, இதுதான் பகுத்தறிவா? உதயநிதி பதவியேற்பு குறித்து தமிழ் நடிகை கேள்வி!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ மற்றும் நடிகர் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவி ஏற்க உள்ளார் என்பதும் அதற்கான ஏற்பாடுகள் முழு அளவில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி ஏற்க இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திமுக இளைஞர் அணி செயலாளராக பதவி ஏற்ற உதயநிதி ஸ்டாலின் அதன்பின் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பதும் தற்போது அவர் அமைச்சராக பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் இன்னும் பெரிய பதவியை அடைவார் என்றும் அவரது கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திமுக என்றாலே பகுத்தறிவு கொள்கையை கடைபிடித்து வரும் கட்சி என்பதும் மூட நம்பிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள் என்பதும் பொதுவாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் அதே நேரத்தில் திமுகவில் உள்ள முக்கிய பிரமுகர்களின் குடும்பத்தினர் கடவுள் வழிபாட்டில் ஈடுபாடு கொண்டவர்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பகுத்தறிவுக் கொள்கையை கடைபிடித்து வரும் திமுகவினர் உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்பு விழாவை சுபயோக சுபதினத்தில் நடத்த இருப்பதாக தமிழ் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: 2022ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி நல்ல நேரமான 9.30 பதவியேற்பு விழா. அடுத்தவன் என்றால் அது ஆரியமாயை, சனாதனம் மூடநம்பிக்கை. நமக்கு என்றால் சுபயோக சுபதினம் சுபமுகூர்ததம் எல்லாம் பார்த்து தொடங்குவதே பகுத்தறிவு’ என்று பதிவு செய்துள்ளார்.
நடிகை கஸ்தூரியின் இந்த பதிவுக்கு ஆதரவு மற்றும் எதிர் கருத்துக்கள் கமெண்ட்ஸ்களாக பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
14th December 2022. Most auspicious day , 9.30 am excellent auspicious time.
— Kasturi Shankar (@KasthuriShankar) December 13, 2022
அடுத்தவன் என்றால் அது ஆரியமாயை, சனாதனம் மூடநம்பிக்கை. நமக்கு என்றால் சுபயோக சுபதினம் சுபமுகூர்ததம் எல்லாம் பார்த்து தொடங்குவதே பகுத்தறிவு.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com