கணவருக்கு பாதபூஜை செய்த தமிழ் நடிகை.. சனாதன தர்மத்தில் இது முக்கியம் என்றும் பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா, கார்த்தி உள்பட பிரபலங்களுடன் நடித்த நடிகை தனது கணவருக்கு பாத பூஜை செய்த புகைப்படத்தை பதிவு செய்து ’சனாதன தர்மத்தில் இது முக்கியமானது’ என்றும் பதிவு செய்துள்ளார்.
சூர்யா நடித்த ’மாஸ் என்ற மாசிலாமணி’ கார்த்தி நடித்த ’சகுனி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ப்ரணிதா சுபாஷ். இவர் தொழில் அதிபர் பிரஜித் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்த நிலையில் இன்று பீமனா அமாவாசை தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தனது கணவருக்கு பாத பூஜை செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் நடிகை பிரணிதா சுபாஷ் பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
பீமனா அமாவாசை முன்னிட்டு இன்று உங்களுக்கு பாத பூஜை செய்கிறேன். இது ஆணாதிக்கத்தின் ஒரு நிகழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் எனக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
சனாதன தர்மத்தில் இந்த சடங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கு ஒரு கதை உள்ளது இந்து சமய சடங்குகள் ஆணாதிக்கம் என்று வாதிடுவது முற்றிலும் ஆதாரமற்றது. ஏனெனில் இது தெய்வங்களை சமமாக வழிபடும் சில நம்பிக்கைகளில் ஒன்றாகும் என்று பதிவு செய்துள்ளார்.
கடந்த ஆண்டு பிரணிதா கணவருக்கு பாத பூஜை செய்த புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் இது ஆணாதிக்கம் கொண்டது என்று பல மீம்ஸ் பதிவானதையும் அவர் இந்த பதிவில் சுட்டிக்காட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Offering puja on the occasion of #BheemanaAmavasya this morning.
— Pranitha Subhash (@pranitasubhash) July 17, 2023
To you, it may be a show of patriarchy (from what I saw last year, with meme pages etc debating this), but to me , it holds great significance.
In #SanatanaDharma, most rituals have a story to back why it is… pic.twitter.com/uZCsL4oID0
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com