புது வீடு, புது ஹோட்டல்.. கலக்கும் பிரபல தமிழ் நடிகை!

  • IndiaGlitz, [Sunday,January 22 2023]

தமிழ் நடிகை ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கடற்கரை ஓரத்தில் புதிய வீடு கட்டிய புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் தற்போது அவர் புதிய ஹோட்டல் ஒன்றை ஆரம்பிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் பிரியா பவானி சங்கர் என்பதும் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி நிகழ்ச்சி தொகுப்பாளர், சீரியல் நடிகை மற்றும் சினிமா நடிகை என படிப்படியாக உயர்ந்தவர் என்பதும் தெரிந்ததே. தற்போது அவர் ’இந்தியன் 2’ உள்பட பல படங்களில் நடித்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கடற்கரை ஓரம் புதிய வீடு ஒன்று வாங்கிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அவர் தனது காதலோடு இருக்கும் அந்த புகைப்படத்தில், ‘எங்களுக்கு 18 வயது இருக்கும்போது கடற்கரையில் இருப்பது மிகவும் விருப்பமானதாக இருந்தது. நிலாவை பார்த்துக்கொண்டே அங்கு ஒரு வீடு கட்ட வேண்டும் என்று கனவு கண்டோம். அந்த கனவு தற்போது நனவாகி உள்ளது’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பிரியா பவானி சங்கர் தற்போது புதிய ரெஸ்டாரண்ட் ஒன்றை திறக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இது குறித்த வீடியோவை அவர் பதிவு செய்து, ‘இது எங்கள் சொந்த உணவகம், இது ஒரு கனவாக இருந்து தற்போது தான் நனவாக போகிறது, மிக விரைவில் இந்த ரெஸ்டாரெண்ட் திறக்கப்பட உள்ளதால் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன், உங்கள் அனைவருக்கும் சேவை செய்ய காத்திருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

பிரியா பவானி சங்கரின் இந்த ரெஸ்டாரெண்ட் விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை பிரியா பவானி சங்கரின் இந்த பதிவுக்கு சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

More News

வயசான காலத்துல இது தேவையா? பிகினி வீடியோ கமெண்டுக்கு நடிகை கஸ்தூரியின் பதிலடி!

நடிகை கஸ்தூரி நீச்சல் குளத்தில் பிகினி உடையுடன் இருக்கும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஒரு ரசிகர் 'வயதான காலத்தில் இது தேவையா?' என கமெண்ட் பதிவு செய்துள்ளார்.

'கை போடுறதுக்கு தனியா காசு கொடுக்கணும்.. அபர்ணா விவகாரத்தால் ஆவேசமான சின்மயி!

சமீபத்தில் மலையாள திரைப்படம் ஒன்றின் பிரமோசனுக்கு நடிகை அபர்ணா பாலமுரளி சென்றபோது கல்லூரி மாணவர் ஒருவர் அபர்ணாவின் தோள் மீது கையை போட முயன்ற விவகாரம் பெரும் பரபரப்பை

'துணிவு' படத்தில் நடித்ததை விட அந்த 3 மணி நேரம் தான் முக்கியம்: அமீர்-பாவனி பதிலடி

 அஜித் நடித்த 'துணிவு' திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் அமீர் மற்றும் பாவனி நடித்த நிலையில் அவர்களது கேரக்டரை கேலி செய்த நெட்டிசன்களுக்கு இருவரும் பதிலடி கொடுத்துள்ளனர்.

பிக்பாஸ் அசீமின் முன்னாள் மனைவி இந்த இளம்பெண்ணா? வைரல் புகைப்படம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான அசீமின் முன்னாள் மனைவி குறித்த புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி உள்ள நிலையில் இந்த இளம் பெண் தான் அசீமின் முதல் மனைவியா?

'வாரிசு' வெற்றி விழாவில் விஜய்.. 'தளபதி 67' படத்தின் செம கெட்டப்!

விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் இந்த படம் குடும்பங்கள் போற்றும் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது என்பதும் இந்த படம் ரூ.200 கோடிக்கும்