புது வீடு, புது ஹோட்டல்.. கலக்கும் பிரபல தமிழ் நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் நடிகை ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கடற்கரை ஓரத்தில் புதிய வீடு கட்டிய புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் தற்போது அவர் புதிய ஹோட்டல் ஒன்றை ஆரம்பிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் பிரியா பவானி சங்கர் என்பதும் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி நிகழ்ச்சி தொகுப்பாளர், சீரியல் நடிகை மற்றும் சினிமா நடிகை என படிப்படியாக உயர்ந்தவர் என்பதும் தெரிந்ததே. தற்போது அவர் ’இந்தியன் 2’ உள்பட பல படங்களில் நடித்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கடற்கரை ஓரம் புதிய வீடு ஒன்று வாங்கிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அவர் தனது காதலோடு இருக்கும் அந்த புகைப்படத்தில், ‘எங்களுக்கு 18 வயது இருக்கும்போது கடற்கரையில் இருப்பது மிகவும் விருப்பமானதாக இருந்தது. நிலாவை பார்த்துக்கொண்டே அங்கு ஒரு வீடு கட்ட வேண்டும் என்று கனவு கண்டோம். அந்த கனவு தற்போது நனவாகி உள்ளது’ என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பிரியா பவானி சங்கர் தற்போது புதிய ரெஸ்டாரண்ட் ஒன்றை திறக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இது குறித்த வீடியோவை அவர் பதிவு செய்து, ‘இது எங்கள் சொந்த உணவகம், இது ஒரு கனவாக இருந்து தற்போது தான் நனவாக போகிறது, மிக விரைவில் இந்த ரெஸ்டாரெண்ட் திறக்கப்பட உள்ளதால் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன், உங்கள் அனைவருக்கும் சேவை செய்ய காத்திருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
பிரியா பவானி சங்கரின் இந்த ரெஸ்டாரெண்ட் விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை பிரியா பவானி சங்கரின் இந்த பதிவுக்கு சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“Our own restaurant” - this has always been the dream and I’m very glad and excited the day is nearing. We are bringing our dream to life and can’t wait to serve you all❤️ LIAM’s Diner - serving soon… pic.twitter.com/AheLmHdBKQ
— Priya BhavaniShankar (@priya_Bshankar) January 22, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments