தமிழ் நடிகையின் தந்தையிடம் வழிப்பறி: வாக்கிங் சென்றபோது நடந்த விபரீதம்

  • IndiaGlitz, [Thursday,May 07 2020]

தமிழ் திரையுலகில் இயக்குனர், நடிகர் எஸ்ஜே சூர்யாவின் ’அன்பே ஆருயிரே’ என்ற படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர்  பிரசாந்தின் ’ஜாம்பவான்’ சிபிராஜின் ‘லீ’ அர்ஜுனனின் ’மருதமலை’ உள்பட ஒருசில படங்களில் நடித்தவர் நடிகை நிலா. பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினரான இவர் நடிகை சிம்ரன் போலவே இருப்பார் என்றும் ரசிகர்களால் கூறப்பட்டது 

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக திரையுலகில் இருந்து விலகி இருந்த நடிகை நிலா சமீபத்தில் வெளியான ‘செக்சன் 375’ என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தின் வெற்றியை அடுத்து அவர் வேறு சில படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள போலீஸ் காலனியில் நிலாவின் தந்தை இன்று அதிகாலை வாக்கிங் சென்றபோது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த விலை மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றதாக தெரிகிறது. இது குறித்து நிலாவின் தந்தை டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இந்த புகாரின் அடிப்படையில் வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர் 

இந்த நிலையில் இதுகுறித்து நடிகை நிலா தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது என்னுடைய தந்தை வாக்கிங் சென்றபோது இரண்டு நபர்கள் ஸ்கூட்டரில் வந்து கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்றனர். தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு இதுதானா? என்று கேள்வி எழுப்பி அதனை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கும் டெல்லி போலீசாருக்கும் டேக் செய்துள்ளார்

நடிகை நிலாவின் நிஜப்பெயர் மீரா சோப்ரா என்பதும் இந்தப் பெயரில்தான் அவருடைய சமூக வலைத்தள பக்கம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

@DelhiPolice my dad was taking a walk in #policecolony. 2 guys came in a scooter, showed knife and snatched his phone. This is how safe you claim delhi to be. @ArvindKejriwal @CPDelhi

— meera chopra (@MeerraChopra) May 5, 2020

More News

தமிழகத்தில் 771, சென்னையில் 324: இதுவரை இல்லாத கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் மற்றும் சமூக விலகலை கடைபிடிக்காதது ஆகியவை காரணமாக

1,2,3,4,...5: செளந்தர்யா ரஜினியின் அசத்தல் டுவீட்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகளும் இயக்குனருமான செளந்தர்யா சமீபத்தில் நடிகர் விசாகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் தெரிந்ததே.

கொரோனா பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானி சுட்டுக்கொலை!!! நீடிக்கும் மர்மம்!!!

பென்சிலேவேனியாவில் கொரோனா வைரஸ் பற்றி குறிப்பிடத்தக்க ஆய்வை மேற்கொண்டு வந்த விஞ்ஞானி ஒருவர் கடந்த வார இறுதியில் சுட்டக் கொல்லப்பட்டார்.

தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடை திறப்பு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மே 4ஆம் தேதி முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு தொடங்கி உள்ளது என்பதும் இந்த ஊரடங்கில் ஒருசில தளர்வுகளை மத்திய அரசு அனுமதித்து உள்ளதை

சலூன் கடை திறக்க அனுமதி இல்லை: விரக்தியில் தூக்கில் தொங்கிய சலூன் கடைக்காரர்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் பெரும்பாலான கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.