மாதவன், சூர்யா பட நடிகை மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித், சூர்யா உட்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்த நடிகை மாளவிகா அவினாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
மாதவன் நடித்த ’ஜே ஜே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா அவினாஷ். இதனை அடுத்து அவர் சூர்யா நடித்த ’ஆறு’ ஜீவா நடித்த ’டிஷ்யூம்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு வெளியான ’கேஜிஎப் சாப்டர் 2’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை மாளவிகா அவினாஷ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் ’ஒற்றை தலைவலி என்று உங்களிடம் யாராவது சொன்னால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். மேலும் பாரம்பரிய மருத்துவம் என்று மருத்துவர் உடைய பரிந்துரையை எதுவும் இல்லாமல் எடுத்துக் கொள்ள வேண்டாம். அது சாதாரண தலைவலி என்பதைவிட வேறு சிக்கல்களை கொண்டு வந்து விடும். இல்லையென்றால் என்னைப்போல் நீங்களும் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும் என்று பதிவு செய்துள்ளார்.
மேலும் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை மாளவிகா அவினாஷ் பதிவு செய்துள்ள நிலையில் அவர் விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout