நடுரோட்டில் கணவருக்கு லிப் கிஸ் கொடுத்து திருமண நாளை கொண்டாடிய தமிழ் நடிகை.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Friday,May 19 2023]

தமிழ் நடிகை தனது முதலாவது திருமண நாளை நேற்று கொண்டாடிய நிலையில் அவர் நடு ரோட்டில் தனது கணவருக்கு லிப் கிஸ் கொடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

தமிழ் திரை உலகில் ஜிவி பிரகாஷ் நடித்த முதல் திரைப்படம் ஆன ’டார்லிங்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. அதன் பிறகு அவர் ’யாகாவாராயினும் நாகாக்க’ ’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ ’கடவுள் இருக்கான் குமாரு’ ’மொட்ட சிவா கெட்ட சிவா’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் நடிகை நிக்கி கல்ராணி கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் தேதி நடிகர் ஆதியை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று ஆதி - நிக்கி கல்ராணி தம்பதியர் பாரீசில் ஈபிள் டவர் முன் தங்களது திருமண நாளை கொண்டாடினர். அப்போது இருவரும் லிப் கிஸ் அடித்த வீடியோ நிக்கி கல்ராணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும் ஆதி - நிக்கி கல்ராணி தம்பதிக்கு ரசிகர்கள் தங்களது திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.