close
Choose your channels

புதிய காதலருக்கு லிப்கிஸ்: ரஜினி, விஜய் பட நடிகையின் புகைப்படங்கள் வைரல்!

Tuesday, September 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் உள்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்த நடிகை ஒருவர் தனது காதலரை பிரிந்த நிலையில் புதிய காதலருடன் லிப்கிஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவான ’மதராசபட்டினம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை எமிஜாக்சன். லண்டனை சேர்ந்த இவர் அதன் பின்னர் விக்ரம் நடித்த ’தாண்டவம்’ விஜய் நடித்த ’தெறி’ தனுஷ் நடித்த ’தங்கமகன்’ ரஜினிகாந்த் நடித்த ’2.0’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் திடீரென லண்டனைச் சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜ் என்பவரை காதலித்து லிவிங் டு கெதர் முறைப்படி குடும்பம் நடத்தினார். இந்த ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நடிகை எமிஜாக்சன் இங்கிலாந்து நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் ஜோடியாக பல இடங்களில் சுற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் தனது புதிய காதலருக்கு லிப்கிஸ் கொடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் எமி ஜாக்சன் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. இந்த நிலையில் மீண்டும் தமிழ் திரையுலகில் எமி ஜாக்சன் நடிக்க இருப்பதாகவும் ஏஎல் விஜய் இயக்கும் அடுத்த படத்தில் அவர் தான் நாயகி என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment