பண்ணை வீட்டில் இரவு பார்ட்டி: சென்னையில் 'காதலன்' பட நடிகையிடம் விசாரணை
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை அருகே உள்ள பண்ணை வீடு ஒன்றில் இரவு பார்ட்டி நடத்திய ’காதலன்’ படத்தில் நடித்த நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சென்னை அருகே கானத்தூர் என்ற பகுதியில் தனியார் சொகுசு பண்ணை விடுதி ஒன்றை சினிமா படப்பிடிப்புக்கு என நடிகை கவிதாஸ்ரீ என்பவர் வாடகைக்கு எடுத்துள்ளார். பின்னர் அதில் பல பிரபலங்களையும் இளம்பெண்களையும் வரவழைத்து இரவு பார்ட்டிகளை நடத்தியுள்ளதாக தெரிகிறது. இந்த பார்ட்டியில் பெண்கள் ஏலம் விடப்பட்டதாகவும் கூறப்பட்டது
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அந்த பண்ணை வீட்டை சுற்றிவளைத்து நடிகை கவிதாஸ்ரீ உள்பட 11 பெண்கள் மற்றும் 15 ஆண்களை மடக்கிப் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இரவு பார்ட்டி நடத்தப்பட்ட பண்ணை வீட்டிற்கு போலீசார் சீல் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பார்ட்டியில் கலந்துகொள்ள விரும்புவர்களிடம் ரூ.1599 ரூபாய் நுழைவுக் கட்டணமாக கவிதாஸ்ரீ வாங்கியுள்ளார் என்றும் பெண்களுக்கு இலவசம் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் இரவு பார்ட்டி நடத்திய துணை நடிகை கவிதாஸ்ரீ உள்பட 15 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை கவிதாஸ்ரீ ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த ’காதலன்’ திரை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments