முன்னணி தமிழ் நடிகையின் இன்ஸ்டாகிராம் ஹேக்கிங்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திரையுலக பிரபலங்களின் சமூக வலைதளப் பக்கங்கள் அவ்வப்போது ஹேக் செய்யப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். நேற்று கூட நடிகை யாமி கவுதம் இன்ஸ்டாகிராம் ஹேக் செய்யப்பட்டது என்பதும் அதற்கு முன்னர் நடிகைகள் அம்ரிதா ஐயர், காயத்ரி உள்பட ஒருசில நடிகைகளின் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷின் இன்ஸ்டாகிராம் பக்கம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ’தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது அல்லது சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளது என்றும் தயவு செய்து இதனை சரி செய்யும் நடவடிக்கைகளுக்கு உதவுமாறும் அவர் இன்ஸ்டாகிராமை டேக் செய்து பதிவுசெய்துள்ளார் . இதனையடுத்து இன்ஸ்டாகிராம் நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷின் இன்ஸ்டாகிராம் பக்கம் மீண்டும் இயங்கியுள்ளது. இதனையடுத்து ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது மோகன்தாஸ், துருவ நட்சத்திரம், த கிரேட் இந்தியன் கிச்சன் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Thank u @instagram for swift response
— aishwarya rajesh (@aishu_dil) April 4, 2022
my account has been reactivated ???? https://t.co/FK6T0KuvVX
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com