பாரீஸ் ஈஃபிள் டவர் முன் செம கிளாமர் உடையில் தமிழ் நடிகை: வீடியோ வைரல்

  • IndiaGlitz, [Friday,July 29 2022]

தமிழ் திரை உலகின் திறமையான நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் பாரீஸ் சுற்றுப்பயணம் செய்திருக்கும் நிலையில் அங்கு உள்ள ஈபிள் டவர் முன் கிளாமர் உடையில் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் நடிப்புக்கு தீனி கிடைக்கும் நல்ல வேடங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ் .ஏழு வருடங்களுக்கு முன்பே ’காக்கா முட்டை’ திரை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து அசத்தினார் என்பதும் அதேபோல் ’கனா’ என்ற திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்து பெரும் பாராட்டை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதும் அவர் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் ’டிரைவர் ஜமுனா’ உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பாரிஸ் சுற்றுப்பயணம் செய்து இருந்த நிலையில் அங்கிருந்து கொண்டே கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் ஈபிள் டவர் முன் எடுக்கப்பட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்துள்ளார். கிளாமர் உடையில் கலக்கும் இந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் அவரது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.