சிம்புவுக்கு முன்பே வெங்கல் ராவுக்கு உதவிய தமிழ் நடிகை.. எவ்வளவு கொடுத்தார் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,June 26 2024]

பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு சிம்பு ரூபாய் 2 லட்சம் உதவி செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஆனால் அவருக்கு முன்பே தமிழ் நடிகை ஒருவர் வெங்கல் ராவுக்கு சத்தமே இல்லாமல் உதவி செய்திருக்கும் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

வடிவேலு உள்பட பல காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்த வெங்கல் ராவ் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பணம் இல்லாததால் அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருவதாகவும் தனக்கு ஒரு கை மற்றும் ஒரு கால் செயல்படவில்லை என்றும், சரியாக பேசக்கூட முடியவில்லை என்றும், எனவே சினிமா கலைஞர்கள் தனக்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்றும் உருக்கமாக வீடியோ ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

இந்த வீடியோ நேற்று இணையத்தில் வைரலான நிலையில் இன்று காலை நடிகர் சிம்பு 2 லட்சம் ரூபாய் வெங்கல் ராவ் சிகிச்சைக்காக நிதி உதவி செய்தார் என்று தகவல் வெளியானது. ஆனால் அவருக்கும் முன்பே நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சார்பாக வெங்கல் ராவ் குடும்பத்திடம் ரூபாய் 25000 கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து மேலும் சில நடிகர் நடிகைகள் அவருக்கு நிதி உதவி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.