2வது திருமணத்திற்கு முன் நடிகை வைத்த பேச்சிலர் பார்ட்டி.. அதுவும் தனி விமானத்தில்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ரஜினிகாந்த், விஜய், விக்ரம், தனுஷ், ஆர்யா உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த நடிகை விரைவில் இரண்டாவது திருமணம் செய்ய இருக்கும் நிலையில் தனது நண்பர்கள் மற்றும் தோழிகளுக்கு தனி விமானத்தில் பேச்சிலர் பார்ட்டி வைத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவான ’மதராசபட்டினம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். இதனை அடுத்து அவர் விக்ரம் நடித்த ’தாண்டவம்’,’ஐ’, விஜய் நடித்த ’தெறி’ ரஜினிகாந்த் நடித்த ’2.0’, தனுஷ் நடித்த ‘தங்கமகன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார் என்பதும் சமீபத்தில் வெளியான ’மிஷின் சாப்டர் ஒன்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை எமி ஜாக்சன் ஏற்கனவே தொழிலதிபர் ஜார்ஜ் என்பாரை திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை இருக்கும் நிலையில் கணவரை விவாகரத்து செய்துவிட்டு விரைவில் எட் வெஸ்ட்விக் என்பவரை இரண்டாம் திருமணம் செய்ய உள்ளார்.இதனை அடுத்து இரண்டாம் திருமணத்திற்கு முன் தனது தோழிகள் மற்றும் நண்பர்களுக்கு பிரான்ஸ் நாட்டில் உள்ள தனி விமானத்தில் எமி ஜாக்சன் பேச்சிலர் பார்ட்டி வைத்தார். அந்த பார்ட்டி குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments