'சர்வைவர்' நிகழ்ச்சியின் சாம்பியன்: ரூ.1 கோடி பரிசு பெற்ற தமிழ் நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில மாதங்களாக ஜீ டிவியில் ’சர்வைவர்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்று வந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் சாம்பியன் பட்டம் வென்று ரூபாய் ஒரு கோடி பரிசை தமிழ் நடிகை ஒருவர் பெற்றுள்ளார்.
ஆக்சன் கிங் அர்ஜுன் நடத்தி வந்த ’சர்வைவர்’ நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று இறுதி போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது
இறுதி போட்டிக்கு நேரடியாக நடிகை விஜயலட்சுமி தேர்வு செய்யப்பட்டார் என்பதும், இதனை அடுத்து வேனசா மற்றும் சரண் ஆகியோர் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இறுதி போட்டியில் சாம்பியன் பட்டம் பெறும் போட்டியாளரை தேர்வு செய்ய வாக்கு போடுவார்கள் வரவழைக்கப்பட்டனர். வாக்களிக்கும் ஜூரிகளாக நந்தா, அம்ஜத், ஐஸ்வர்யா, நாராயணன், விக்ராந்த், இனிகோ பிரபாகர், உமாபதி ஆகியோர் அளித்த வாக்குகளின் அடிப்படையில் விஜயலட்சுமி 4 ஓட்டுகளையும், சரண் 3 ஓட்டுகளையும் பெற்றனர். மற்றொரு இறுதி போட்டி வேட்பாளரான வேனசாவுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து ’சர்வைவர்’ சாம்பியன் பட்டம் விஜயலட்சுமிக்கு என அர்ஜூன் அறிவித்து அவருக்கு பரிசுத்தொகை ரூபாய் ஒரு கோடியை அளித்தார். சாம்பியன் பட்டம் வென்ற விஜயலட்சுமிக்கு சக போட்டியாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை விஜயலட்சுமியின் சகோதரி கனி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சாம்பியன் பட்டம் பெற்ற நிலையில் தற்போது விஜயலட்சுமி ’சர்வைவர்’ நிகழ்ச்சியின் சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Bang Bang Bangggggggg.... ??
— Zee Tamil (@ZeeTamil) December 12, 2021
Annndddd The Winner is @vgyalakshmi ...???? . The Supermom becomes the sole Survivor... #SurvivorTamil #Survivor #SurvivorFinale #ZeeTamil #GrandFinale #சர்வைவர் #Kombargal #ActionKingArjun #Vijayalakshmi pic.twitter.com/0w6UulWHpS
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments