எம்ஜிஆர், சிவாஜி முதல் கார்த்தி வரை நடித்த பழம்பெரும் தமிழ் நடிகைக்கு பத்மஸ்ரீ விருது!

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் முதல் தற்போதைய நடிகரான கார்த்தி வரை பல தலைமுறைகளை கண்ட பழம்பெரும் நடிகைக்கு பத்மஸ்ரீ விருது சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

பழம்பெரும் தமிழ் நடிகை சௌகார் ஜானகி அவர்களுக்கு பத்ம விருதை சற்றுமுன் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1952 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்த வளையாபதி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சௌகார் ஜானகி. அதன்பின்னர் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்பட பல பிரபலங்களுடன் அவர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட அவர் கார்த்தி நடித்த ’தம்பி’ என்ற திரைப்படத்திலும், சந்தானம் நடித்த ’பிஸ்கோத்து’ படத்திலும் சௌகார் ஜானகி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் கலைத்துறையில் சவுகார்ஜானகி செய்த சேவையை பாராட்டி அவருக்கு பத்மஸ்ரீவிருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழ் திரையுலகினர் சௌகார் ஜானகிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தமிழகத்தைச் சேர்ந்த சிற்பி பாலசுப்பிரமணியம், தாமோதரன், பல்லேஷ் பஜாந்திரி, வீராசாமி சேஷைய்யா, முத்து கண்ணம்மாள் உள்பட 7 பேர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.