தமிழ் திரைப்பட நடிகைக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்: என்ன காரணம்?
- IndiaGlitz, [Friday,June 11 2021]
விஜயகாந்த் நடித்த ’அரசாங்கம்’ கருணாஸ் நடித்த ’அம்பாசமுத்திரம் அம்பானி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த தமிழ் நடிகை ஒருவருக்கு நாக்பூர் உயர்நீதிமன்றம் ரூபாய் இரண்டு லட்சம் அபராதம் விதித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நடிகை நவ்நீத் கவுர் என்பவர் மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள அமராவதி என்ற தொகுதியில் போட்டியிட்டார். இந்த தொகுதி தனித்தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தத் தேர்தலில் நவ்நீத் கபூர் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து தோல்வி அடைந்த ஆனந்தராவ் என்பவரை நவ்நீத் கபூர் வெற்றியை எதிர்த்து நாக்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில் நடிகை நவ்நீத் கவூர் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த லபனா என்ற ஜாதியை சேர்ந்தவர் என்றும் அவரது ஜாதி மகாராஷ்டிர மாநில பட்டியலினத்தில் வராது என்றும், ஆனால் பட்டியல் இனத்திற்குள் வரும் மோச்சி என்ற ஜாதியின் பெயரில் சட்டவிரோதமாக போலி சான்றிதழ்களை சமர்பித்து போட்டியிட்டு நவ்நீத் கபூர் வென்றுள்ளார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த நாக்பூர் நீதிமன்றம் போலியான ஜாதிச் சான்றிதழை சமர்ப்பித்த நடிகை நவ்நீத் கவுருக்கு ரூபாய் 2 லட்சம் அபராதம் விதித்தது. மேலும் உண்மையான சான்றிதழை நீதிமன்றத்தில் 6 மாத காலத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இந்த தீர்ப்பை எதிர்த்து நடிகை நவ்நீத் கவுர் சுப்ரீம் கோர்ட் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.