பகல் இரவானது.. பொருட்கள் தூக்கி வீசப்பட்டன.. துபாய் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் நடிகையின் பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் துபாயில் வரலாறு காணாத கனமழை பெய்ததை அடுத்து நாடு முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது என்பதும் பல குடியிருப்புகளில் தண்ணீர் புகுத்ததால் ஏராளமான மக்கள் அவஸ்தைப்பட்டனர் என்ற செய்தியையும் பார்த்தோம்.
இந்த நிலையில் துபாயில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கிய அனுபவம் குறித்து தமிழ் நடிகை ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
தமிழில் வெளியான ’555’ ’விழித்திரு’ ’விரட்டு’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை எரிகா பெர்னாண்டஸ். இவர் பாலிவுட்டில் சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். தற்போது இவர் துபாயில் செட்டில் ஆகியுள்ள நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மழை குறித்து பதிவு செய்துள்ளார்
16ஆம் தேதி நள்ளிரவு திடீரென குளிர்ந்த காற்று வீசியது, மழையும் பெய்ததால் அதை ரசிக்க தொடங்கினேன், ஆனால் சில நிமிடங்களில் பகல் இரவானது, மேகங்கள் மொத்த நகரத்தையும் மூடிவிட்டது, பலத்த காற்று வீசியதால் வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் தூக்கி வீசப்பட்டன, பக்கத்து வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் பறந்து வந்தது, எனவே நான் மிகவும் பயந்துவிட்டேன்
எங்கள் வீட்டிற்குள் வந்த மழை தண்ணீரை வெளியேற்ற ரொம்ப கஷ்டப்பட்டோம், எனது பாதுகாப்பு குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி, அதிர்ஷ்டவசமாக நாங்கள் எந்த ஆபத்திலும் சேர்க்காமல் பாதுகாப்பாக உள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com