திருமணமாகி 25 ஆண்டுகள் கழித்து விவாகரத்தா? தமிழ் நடிகையின் கணவர் விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகில் கடந்த 90 களில் பிரபலமாக இருந்த நடிகை சிவரஞ்சனி தனது கணவரை விவாகரத்து செய்யப்போவதாக ஒரு சில யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருவதை அடுத்து இது குறித்து அவரது கணவர் விளக்கமளித்துள்ளார்.
‘மிஸ்டர் கார்த்திக்’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான நடிகை சிவரஞ்சனி அதன் பின்னர் ’தலைவாசல்’ ’சின்னமாப்ளே’ ‘கலைஞன்’ ’தாலாட்டு’ ’அரண்மனை காவலன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.
இவர் கடந்த 1997ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பதும் இவர்களது மகன் ரோஷன் தற்போது தெலுங்கு திரையுலகில் நடிகராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திருமணம் நடந்து 25 ஆண்டுகள் கழித்து நடிகை சிவரஞ்சனி தனது கணவரை விவாகரத்து செய்ய போவதாகவும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பணப்பிரச்சனை தான் விவாகரத்துக்கு காரணம் என்றும் சில தெலுங்கு யூடியூப் சேனலில் செய்திகள் வெளியாகி உள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிவரஞ்சனியின் கணவர் ஸ்ரீகாந்த் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுபோன்ற வதந்திகளை பரப்புவது யார் என்றே தெரியவில்லை. பணச்சிக்கல் காரணமாக நாங்கள் விவாகரத்து செய்ய உள்ளதாக பொய் செய்தியை பரப்பி வருகின்றனர். என்னிடம் எனது மனைவி வருத்தத்துடன் இந்த செய்தியை காட்டியபோது அதை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறி இருக்கிறேன். இதுபோன்று ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் மீது வழக்கு போடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து நடிகை சிவரஞ்சனி விவாகரத்து செய்ய போவதாக வெளியான செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout