நிறைமாத கர்ப்பத்திலும் செம டான்ஸ் ஆடும் தமிழ் நடிகை.. வீடியோ வைரல்..!
- IndiaGlitz, [Saturday,April 01 2023]
தமிழ் நடிகை ஒருவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவர் செம டான்ஸ் ஆடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரை உலகில் பரத் நடித்த ’முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு ’தகராறு’ ’காப்பான்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா.
இவர் கடந்த ஆண்டு துபாய் தொழிலதிபர் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் இவர் கர்ப்பமானார் என்பதும் கடந்த சில வாரங்களுக்கு முன் இவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்பது தெரிந்ததே. வளைகாப்பு நிகழ்ச்சி குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் அவரது இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகின.இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ’தசரா’ என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நடிகை பூர்ணா, அந்த படத்தின் பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.
மேலும் கீர்த்தி சுரேஷ் உடன் நடித்த இந்த படத்தை நான் மிகவும் பெருமையுடன் பார்க்கிறேன் என்றும் அவர் மிகவும் இனிமையானவர் என்றும் எனது கேரக்டர் மிகவும் அற்புதமானது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் ரமலான் மாதத்தில் பிறக்கவிருக்கும் என குழந்தையை வரவேற்க காத்திருக்கிறேன் என்றும் அவர் இன்னொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.