கிஷோர் கே ஸ்வாமி கைதுக்கு கண்டனம் தெரிவித்த தமிழ் நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல அரசியல் விமர்சகர் மற்றும் சமூக வலைதள பயனாளி கிஷோர் கே ஸ்வாமி இன்று காலை கைது செய்யப்பட்டார் என்பதும் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டதை அடுத்து செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் இந்நாள் முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல தலைவர்களை கிஷோர் கே ஸ்வாமி தனது சமூக வலைப்பக்கத்தில் அவதூறாக பேசியதாக திமுக ஐடி விங் கொடுத்த புகாரின் அடிப்படையில் கிஷோர் கே ஸ்வாமி கைது செய்யப்பட்டார். அவரது கைதுக்கு பாஜகவினர் தங்களது கண்டனத்தை தெரிவித்துக் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் தமிழ் நடிகையும் பாஜக பிரபலமுமான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கிஷோர் கே ஸ்வாமி கைதுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
கிஷோர் கே ஸ்வாமி திமுக தலைவர்களை விமர்சித்த காரணத்திற்காக கைது செய்துள்ளதற்கு எனது கண்டனம். ஜனநாயகம் எங்கே இருக்கின்றது? பிரதமர் குறித்து ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் இருவரும் பொய்யாக பேசுகிறார்கள்,. இந்து தர்மம், பிராமணர்கள் பற்றி திருமாவளவன் தவறாக பேசும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com