எஸ்வி சேகர் என்னை மிரட்டுகிறார்.. முதல்வருக்கு புகார் அளித்த தமிழ் நடிகை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
எஸ் வி சேகர் தன்னை மிரட்டுவதாக தமிழ் நடிகை ஒருவர் முதலமைச்சருக்கு புகார் அளித்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
நடிகர் மற்றும் அரசியல்வாதி எஸ்வி சேகர் தன்னை மிரட்டுவதாக நடிகை காயத்ரி சாய் என்பவர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தான் ஒரு பாலியல் புகார் கொடுத்ததாகவும், அந்த வழக்கை தற்போது வாபஸ் பெற வேண்டும் என குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஆதரவாக நடிகர் எஸ் வி சேகர் தன்னை தொடர்பு கொண்டு வற்புறுத்தி வருவதாகவும் காயத்ரி சாய் புகார் அளித்துள்ளார்.
தற்போது கணவனை இழந்து தனியாக வாழ்ந்து வரும் சூழ்நிலையில் தனக்கு ஏற்பட்ட அநியாயத்துக்கு நீதி வேண்டும் என நீதிமன்றம் படிக்கட்டுகளை நாடினேன் என்றும், இந்த சூழலில் சில ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த வழக்கு தீர்ப்பை நெருங்கி உள்ள நிலையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் தரப்பிலிருந்து, அவருக்கு ஆதரவாக நடிகர் எஸ்வி சேகர் என்னை தொடர்பு கொண்டு, அரசாங்க தரப்பில் இருந்து நான் பேசுகிறேன், எனவே நீங்கள் இந்த வழக்கை வழக்கு திரும்ப பெற வேண்டும், அப்போதுதான் உங்களுடைய எதிர்காலத்திற்கு நல்லது, உங்களுடைய மகளின் எதிர்காலத்துக்கு நல்லது என்று எஸ்வி சேகர் மிரட்டுவதாக காயத்ரி சாய் கூறியுள்ளார்.
இந்த வழக்கை விட்டால் வாபஸ் பெறாவிட்டால் உங்கள் மகள் அமெரிக்க செல்வதற்கான விசாவில் பிரச்சனை வந்துவிடும் என்று அவர் கூறி மிரட்டுவதாக எனவே இந்த விஷயத்தில் தனக்கு உரிய நியாயம் வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட எனக்கு நீதி வேண்டும் என்றும் காயத்ரி சாய் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் எஸ்.வி.சேகர் தரப்பு என்ன சொல்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com