வாங்க பழகலாம் ஒன்றரை லட்சம் கேட்கும் தமிழ் நடிகை: அதிர்ச்சி விலைப்பட்டியல்
Send us your feedback to audioarticles@vaarta.com
தன்னுடன் பழகுவதற்கு ரூபாய் ஒன்றரை லட்சம் கேட்கும் தமிழ் நடிகை குறித்த செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விக்ரம் நடித்த ’ஜெமினி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் கமல்ஹாசனின் ’அன்பே சிவம் உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை கிரண். இவர் தன்னுடன் உரையாடுவதற்கும் பழகுவதற்கும், டின்னர் சாப்பிடுவதற்கும், தன்னுடைய புகைப்படங்களை பெறுவதற்கும், பல்வேறு விதங்களில் கட்டணங்களை நியமித்துள்ளார்.
நடிகை கிரண் தன்னுடைய இணையதளத்தில் இதுகுறித்த பட்டியலை அறிவித்து உள்ளார். அதில் தன்னை நேரடியாக சந்தித்து பேசி பழகுவதற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளார்கள். அவருடன் சிலமணி நேரங்கள் பொழுது கழித்து, பேசி, அவருடன் டின்னர் சாப்பிடத்தான் இந்த ரூ.1.50 லட்சம் கட்டணம்.
அதேபோல் இதுவரை இன்ஸ்டாகிராமில் வெளியாகாத ஹாட் புகைப்படங்கள் வேண்டுமென்றால் அதற்கு 2000 ரூபாய் கட்டணம் என்றும், இன்ஸ்டாகிராமில் இல்லாத சில கண்டெண்ட்கள் வேண்டுமென்றால் அதற்கு வெறும் 49 ரூபாய் கட்டணம் கட்டினால் போதும் .
அதேபோல் ஸ்பெஷல் ஹாட் படம் வேண்டும் ஆயிரம் ரூபாய் கட்டணம் கட்ட வேண்டும். அதேபோல் கிரணுடன் வீடியோ காலில் அரை மணி நேரம் பேச வேண்டும் என்றால் 30 ஆயிரம் ரூபாயும், 15 நிமிடங்கள் பேச வேண்டும் என்றால் ரூ.13,000 கட்ட வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.
41 வயதான கிரண் தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் இணையதளம் மற்றும் செயலி மூலம் மேற்கண்ட அறிவிப்புகள் மூலம் நிறைய சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com