பெயரை மாற்றி தமிழ் கலாச்சாரத்தில் இணைந்த நடிகை: குவியும் பாராட்டுக்கள்!
- IndiaGlitz, [Wednesday,June 22 2022]
தமிழ் திரைப்பட நடிகை ஒருவர் தனது பெயரை மாற்றி தமிழ் கலாச்சாரத்தில் இணைந்து உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்தியா முழுவதும் பெயருக்கு பின்னால் தங்களது சாதியின் அடையாளத்தை வைத்துக் கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் கடந்த 50 ஆண்டுகளாக பெயருக்கு பின்னால் ஜாதி அடையாளத்தை பின்பற்றும் போக்கு முற்றிலும் நீங்கி விட்டது என்பதும் தமிழகத்தில் உள்ளவர்கள் யாரும் தங்களது ஜாதியை பெயருக்கு பின்னால் தற்போது குறிப்பிடுவது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜாதி குறித்த விழிப்புணர்ச்சி காரணமாகவே தமிழர்கள் இந்த வழியை பல ஆண்டுகளாக பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் திரைப்பட நடிகை மற்றும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ஜனனி அய்யர் தனது பெயரை ஜனனி என்று மாற்றிக்கொண்டார்.
இனிமேல் அய்யர் என்ற பெயர் தன்னுடைய பெயருக்கு பின்னால் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜாதி அடையாளத்தை தன்னுடைய பெயருக்கு பின்னால் இருந்து நீக்கிய ஜனனி, தமிழ் கலாச்சாரத்தில் இணைந்துள்ளார் என்று அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Yesterday actress janani requested media to write her name as "janani" not as janani iyer.... Actually she changed her name as janani in last year
— APKᶜᶦⁿᵉᵐᵃᵃᵛᵃᶦ ⁿᵉˢᶦᵖᵃᵛᵃⁿ???? (@smithpraveen55) June 21, 2022
Note :- she removed her surname "iyer"
Respect increases....???????? forever fanboy of @jananihere ♥️?? pic.twitter.com/a03NZEjTMx