கணவருக்கு பாதபூஜை செய்த சூர்யா-கார்த்தி பட பிரபல நடிகை: எதற்காக தெரியுமா?
- IndiaGlitz, [Thursday,July 28 2022]
சூர்யா, கார்த்தி படங்கள் உட்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகை தனது கணவருக்கு பாத பூஜை செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
சூர்யா நடித்த ‘மாஸ்’, கார்த்தி நடித்த ‘சகுனி’ உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் தொழில் அதிபர் பிரஜித் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் இவருக்கு குழந்தை பிறந்தது என்பதும், குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று தென்னிந்தியா முழுவதும் பீமா அமாவாசை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பார்வதி தேவிக்கு சிவபெருமான் அவருடைய பக்தியை புரிந்துகொண்டு ஆசீர்வதித்த நாள் தான் பீமா அமாவாசை தினம் என்றும் அதனால் இன்றைய தினம் கணவருக்கு பூஜை செய்யும் மனைவி நீண்ட ஆயுளுடன் எல்லா வளமும் பெற்று வாழ்வார்கள் என்றும் நம்பிக்கை உள்ளது.
தென்னிந்தியாவில் உள்ள பல பெண்கள் பீமா அமாவாசை தினத்தை கொண்டாடி வரும் நிலையில் நடிகை ப்ரணிதாவும் தனது கணவருக்கு பாதபூஜை செய்து கொண்டாடியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.