டாக்டர் படிப்பை முடித்து மருத்துவராகிவிட்ட தமிழ் நடிகை.. அமெரிக்காவில் செட்டில்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகில் நடித்துக் கொண்டிருந்த நடிகை டாக்டர் ஆக வேண்டும் என்று கனவுடன் இருந்த நிலையில் அவர் தற்போது டாக்டருக்கு படித்து முடித்து அமெரிக்காவில் மருத்துவராக பணி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
கடந்த 2010 ஆம் ஆண்டு ’அவள் பெயர் தமிழரசி ’என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை வித்யா பிரதீப். இவர் ’சைவம்’ ’அதிபர்’ ’பசங்க 2’ ’அச்சமின்றி’ ’களரி’ ’தடம்’ ’பொன்மகள் வந்தாள்’ ’கண்ணகி’ உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் ‘நாயகி’ உட்பட சில தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் மருத்துவம் படித்து முடித்து உள்ள வித்யா பிரதீப் தற்போது அமெரிக்காவின் மருத்துவராக பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் மருத்துவர் ஆனது கொடுக்க சில புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
இந்த நிலையில் சமீபத்தில் தனது கணவரின் பிறந்தநாளை அடுத்து ரொமான்ஸ் பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராமில் செய்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments