அருவியில் ஹாயாக குளியல் போட்ட தமிழ் நடிகை.. வீடியோ வைரல்..!
- IndiaGlitz, [Thursday,April 20 2023]
தமிழ் நடிகை ஒருவர் அருவியில் ஹாயாக குளிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட் குவிந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான ’வழக்கு எண் 18/9’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். அதன் பிறகு அவர் ’ஆதலினால் காதல் செய்வீர்’ ’ஜன்னல் ஓரம்’ ’பட்டைய கிளப்பணும் பாண்டியா’ ’திரிஷா இல்லனா நயன்தாரா’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
30 வயதான பெங்களூரை சேர்ந்த மனிஷா யாதவ் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலம் என்பதும் அவருக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மனிஷா யாதவ் அருவியில் ஹாயாக குளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
நேற்று மாலை நீர் அருவிகளில் நேரத்தைக் கழித்த ஒரு அற்புதமான நேரம்… இது கங்கை நதியில் சேரும் கிளை நதி... இமயமலையில் இருந்து வரும் குளிர்ந்த நீரில் மிகவும் புத்துணர்ச்சியூட்டும் குளியல்’ என்று பதிவு செய்துள்ளார்.