தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து கருத்து தெரிவித்த தமிழ் நடிகை கைது?

  • IndiaGlitz, [Wednesday,May 23 2018]

தூத்துக்குடியில் நேற்றும் இன்றும் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் 12 பேர் வரை கொல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவத்திற்கு காரணமான தமிழக காவல்துறையை கோலிவுட் திரையுலகினர் பலர் கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில் துப்பாக்கிச்சூடு தொடர்பாக அவதூறு கருத்து தெரிவித்ததாக சின்னத்திரை நடிகை நிலானி மீது சென்னை வடபழனி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரிஷி என்பவரின் புகாரின்கீழ், போலீஸ் சீருடையை தவறாக பயன்படுத்தி ஆள்மாறட்டம் செய்ததாக நிலானி மீது வழக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக நடிகை நிலானி சின்னத்திரை படப்பிடிப்பு ஒன்றுக்காக அணிரிந்திருந்த போலீஸ் சீருடையுடன் தூத்துகுடி சம்பவம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் போலீசார்கள், போராட்டக்காரர்களை நெஞ்சில் சுட எந்த அதிகாரமும் இல்லை என்றும், இது திட்டமிட்ட கொலை என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கமல் மீது வழக்கா? காட்டமான விஷால்

தூத்துகுடியில் நேற்று நடைபெற்ற காவல்துறையினர்களின் துப்பாக்கி சூடு காரணமாக 11 அப்பாவி பொதுமக்கள் மரணம் அடைந்தனர். அவர்களுடைய குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவும்,

மீண்டும் துப்பாக்கி சூடு: தூத்துக்குடியில் ஒருவர் பலி

சுற்றுச்சுழலை பாதிக்கும் வகையில் செயல்பட்டு கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று தூத்துகுடி மக்கள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக போராடி வரும்

கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு: தூத்துகுடி காவல்துறையினர் அதிரடி

தூத்துகுடியில் நடந்த காவல்துறையினர் துப்பாக்கி சூடு சம்பவம் காரணமாக 11 பேர் பலியாகினர். பல அப்பாவி பொதுமக்கள் துப்பாக்கி சூட்டினால் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காவல்துறையின் வரம்பு மீறிய மிருகத்தனமான செயல்: தூத்துக்குடி சம்பவம் குறித்து ரஜினிகாந்த்

நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கூடி போராட்டம் நடத்தி கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட வன்முறையால் போலீசார் துப்ப்பாக்கி சூடு நடத்தினர்.

தூத்துகுடியில் போலீஸ் வாகனம் எரிப்பு: மீண்டும் பதட்டம்

தூத்துகுடியில் நேற்று நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தால் 11 பேர் பலியான நிலையில்