இ.எஸ்.ஐ. பணத்தில் முறைகேடு.. நடிகைக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்..!

  • IndiaGlitz, [Saturday,October 21 2023]

இஎஸ்ஐ பணத்தில் முறைகேடு செய்த நடிகைக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கமல்ஹாசனின் ’சலங்கை ஒலி’ ’நினைத்தாலே இனிக்கும்’ விஜயகாந்தின் ’ஏழை ஜாதி’ உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஜெயப்பிரதா . இவருக்கு சென்னையில் ஒரு திரையரங்கம் சொந்தமாக இருக்கும் நிலையில் இந்த திரையரங்கில் பணிபுரிந்த தொழிலாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட இ.எஸ்.ஐ. தொகையை, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என புகார் எழுந்தது. இதனை அடுத்து, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்பில் ஜெயப்ரதா மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜெயப்பிரதாவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயப்ரதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

ஜெயப்ரதாவின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், எழும்பூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்தியது. மேலும் ஜெயப்ரதா 15 நாட்களில் நீதிமன்றத்தில் சரணடைந்து, ரூ.20 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு ஜெயப்ரதாவின் அரசியல் வாழ்க்கையில் பெரும் பின்னடைவாக இருக்கும் என கூறப்படுகிறது. வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில், அவர் போட்டியிட திட்டமிட்டிருந்த நிலையில் இந்த தண்டனை, அவரது அரசியல் வாழ்க்கைக்கு பெரும் தடையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.