close
Choose your channels

பிரபல தமிழ் நடிகை - இயக்குனர் காலமானார்.. திரையுலகினர் சோகம்..!

Thursday, October 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தமிழ் நடிகை மற்றும் இயக்குனர் நேற்று இரவு காலமானதை அடுத்து தமிழ் திரை உலகினர் அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

தமிழ் திரையுலகின் பிரபல நடிகை மற்றும் இயக்குனர் ஜெயதேவி நேற்று இரவு காலமானார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 65. கடந்த 1976ஆம் ஆண்டு வெளியான ‘இதயமலர்’ என்ற திரைப்படத்தில் நடிகையாக ஜெயதேவி 20 வயதில் சினிமாவில் அறிமுகமானார்.

அதன்பின்னர் ’சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு’, ’வாழ நினைத்தால் வாழலாம்’, ’சரியான ஜோடி’ ஆகிய படங்களில் அவர் நடித்துள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி ’நலம் நலமறிய ஆவல்’, ’விலாங்கு மீன்’, ’விலங்கு’, ’பாசம் ஒரு வேஷம்’, ’பவர் ஆஃப் வுமன்’ ஆகிய படங்கள் உள்பட சுமார் 15 படங்களை இயக்கியுள்ளார். மேலும் சத்யராஜ், ராதிகா நடித்த ‘புரட்சிக்காரன்’ படத்திற்கு கதை வசனம் எழுதியுள்ளார். இவர் பிரபல இயக்குனர் வேலு பிரபாகரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சில தினங்களுக்கு முன்பு தான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் நேற்று திடீரென அவர் காலமானார். ஜெயதேவியின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment