வில்ஸ்மித் மனைவிக்கு இருந்த அதே பிரச்சனை தமிழ் நடிகைக்கும் இருந்ததா? அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Thursday,March 31 2022]
ஹாலிவுட் நடிகர் வில்ஸ்மித் மனைவிக்கு இருந்த அலோபீசியா என்ற நோய் தமிழ் நடிகைக்கும் இருந்ததாக வெளியாகி இருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றது என்பதும் இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை வில் ஸ்மித் வாங்கினார் என்பது தெரிந்ததே. இந்த விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளர் கிரிஸ் ராக், வில்ஸ்மித் மனைவி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய போது ஆத்திரமடைந்த வில்ஸ்மித் அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அதாவது வில்ஸ்மித் மனைவிக்கு அலோபீசியா என்ற நோய் இருந்த காரணத்தினால் அவரது தலைமுடி கொட்டி மொட்டையாக இருந்ததை கிறிஸ் ராக் கேலி செய்திருந்தார். அதனால் ஆத்திரமடைந்த வில்ஸ்மித் அவரது கன்னத்தில் ஓங்கி அடித்தார்.
இந்த நிலையில் வில்ஸ்மித் மனைவிக்கு இருந்த அதே பிரச்சனை தனக்கும் இருந்ததாக தமிழ் நடிகை சமீரா ரெட்டி தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அஜித் நடித்த அசல், மாதவன் நடித்த வேட்டை, சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் உள்பட பல திரைப்படங்களில் நடித்திருந்த சமீராரெட்டி, அலோபீசியா நோய் தனக்கும் சில ஆண்டுகளுக்கு இருந்ததாகவும், இந்த நோய் காரணமாக தனக்கும் முடி கொட்டியது என்றும், அதன் பிறகு சிகிச்சை எடுத்துக் கொண்ட பிறகு பிரச்சனை சரியாகிவிட்டதாகவும் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். தற்போது தனக்கு நீண்ட தலைமுடி காணப்பட்டாலும் இந்த நோய் தனக்கு மீண்டும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.