கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறார்கள்: திமுக பிரமுகர்கள் மீது தமிழ் நடிகை பகீர் குற்றச்சாட்டு!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு பக்கம் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து மக்களின் மத்தியில் பாராட்டுகளை குவித்து வரும் நிலையில் ஒரு சிலர் ஆட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொதுமக்களை மிரட்டி வருவது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்த வகையில் நடிகை ஆதிரா பாண்டி லட்சுமி என்பவர் தன்னையும் தனது மகனையும் திமுக பிரமுகர்கள் மிரட்டுவதாகவும், கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
சந்தேகதிர்க்கிடமான சிலர் எதிர் வீட்டில் சுவர் ஏறுவதை தட்டிக்கேட்ட என்னையும், மகனையும் அப்பகுதி திமுக இளைஞர் அணியினருடன் சேர்ந்து சுற்றிவளைத்து தாக்கி, வீட்டில் நுழைந்து என் மகனை அடித்து கொலை மிரட்டல் விட்டார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு அரசு கொடுக்குமா? என்று பதிவு செய்துள்ளார்.
அதேபோல் இன்னொரு டுவிட்டில் நம்மாழ்வார் அக்குப்பஞ்சர் சிகிச்சை மையத்துக்கு வந்த கர்ப்பிணி பெண்ணை "இங்கு வந்தால் கொன்று விடுவேன்!" என்று மிரட்டி அங்கிருந்த பைக்குகளை அவர் மீது தள்ளும் மதுரவாயல் தொகுதி வளசரவாக்கம் திமுக இளைஞர் அணி நபர்கள். அரசின் நடவடிக்கை தேவை என்று பதிவு செய்துள்ளார். மேலும் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும், அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று தான் நம்புவதாகவும் நடிகை ஆதிரா பாண்டிலட்சுமி தெரிவித்துள்ளார்.
சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசித்து வரும் ஆதிரா பாண்டிலட்சுமி. ’ஒரு குப்பை கதை’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நம்மாழ்வார் அக்குப்பஞ்சர் சிகிச்சை மையத்துக்கு வந்த கர்ப்பிணி பெண்ணை "இங்கு வந்தால் கொன்று விடுவேன்!" என்று மிரட்டி அங்கிருந்த பைக்குகளை அவர் மீது தள்ளும் மதுரவாயல் தொகுதி வளசரவாக்கம் திமுக இளைஞர் அணி நபர்கள். அரசின் நடவடிக்கை தேவை. @mkstalin @Udhaystalin @chennaipolice_ pic.twitter.com/OgSVMhpazm
— Aadhira Pandilakshmi (@AadhiraOfficial) June 13, 2021
சந்தேகதிர்க்கிடமான சிலர் எதிர் வீட்டில் சுவர் ஏறுவதை தட்டிக்கேட்ட என்னையும், மகனையும் அப்பகுதி திமுக இளைஞர் அணியினருடன் சேர்ந்து சுற்றிவளைத்து தாக்கி, வீட்டில் நுழைந்து என் மகனை அடித்து கொலை மிரட்டல் விட்டார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு அரசு கொடுக்குமா? @mkstalin @Udhaystalin pic.twitter.com/8mONmK5U80
— Aadhira Pandilakshmi (@AadhiraOfficial) June 13, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments