ஹாலிவுட் த்ரில்லர் படத்தில் தமிழ் நடிகை.. படப்பிடிப்பு எங்கே தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகில் உள்ள பல நடிகர் நடிகைகள் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகில் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் பிரபல தமிழ் நடிகை ஒருவர் ஹாலிவுட்டில் தயாராகும் த்ரில்லர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரும் உலகநாயகன் கமல்ஹாசனின் மகளுமான ஸ்ருதிஹாசன் ஹாலிவுட்டில் உருவாக இருக்கும் சைக்கோ திரில்லர் படத்தில் நடிக்க உள்ளார். ‘தி ஐ’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை Daphne Schmon என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்தில் ஹாலிவுட்டின் முன்னணி நடிகரான மார்க் ரெளலே என்பவர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பதும் இந்த படத்தின் இன்னொரு முக்கிய வேடத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஹாலிவுட் திரில்லர் படமான ’தி ஐ’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக கிரீஸ் நாட்டிற்கு சென்று உள்ளதாக ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் தனக்கு மிகவும் ஸ்பெஷலான படம் என்றும் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பிரபாஸ் நடித்து வரும் ‘சலார்’ படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. அதேபோல் என்டிஆர் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகிவரும் படத்திலும் சிரஞ்சீவியின் அடுத்த படத்திலும் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
FINALLY! So happy to share with all of you why I’m in Greece !! ?? super stoked to be a part of this special and exciting project ???? https://t.co/rTu8owUEC5
— shruti haasan (@shrutihaasan) October 20, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments