ஹேமா கமிஷன் அறிக்கை.. பதில் சொல்ல மறுக்கும் ரஜினி உட்பட பிரபல நடிகர்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரளாவில் உள்ள நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக ஹேமா கமிஷன் அறிக்கை தெரிவித்துள்ள நிலையில் இந்த கமிஷனின் அறிக்கை குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முன்னணி நடிகர்கள் மறுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள சினிமாவை தற்போது ஹேமா கமிஷன் அறிக்கை புரட்டி போட்டு உள்ள நிலையில் நடிகர் மோகன்லால் உட்பட நடிகர் சங்கத்தில் உள்ள நிர்வாகிகள் திடீரென ராஜினாமா செய்தார்கள் என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் ஹேமா கமிஷன் குறித்து தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்கும் போது பலர் மௌனத்தை பதிலாக தருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் மலையாள சினிமாவில் ஹேமா கமிஷன் அறிக்கை பற்றி கேட்டபோது அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று பதில் கூறிவிட்டு நழுவி விட்டார்.
அதேபோல் ஜீவாவிடம் இந்த கேள்வியை கேட்ட போது அனைத்து துறைகளிலும் இந்த பிரச்சனை உள்ளது என்றும் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதே கேள்வியை மீண்டும் கேட்டபோது தமிழ் திரையுலகில் இந்த பிரச்சனை இல்லை என்றும் இந்த கேள்வியை நீங்கள் மலையாள நடிகர்களை தான் கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அதே போல் நேற்று கார்த்தி நடித்த ’மெய்யழகன்’ திரைப்பட ஆடியோ விழாவில் இந்த கேள்வி கேட்கப்பட்டபோது கார்த்தி இந்த கேள்விக்கான பதில் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னணி நடிகர்கள் ஹேமா கமிஷன் குறித்து பதில் சொல்லாமல் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments